ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்த தினத்தை 2013 ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகின்றது (United Nations International Day to End Obstetric Fistula).
இது மகப்பேறியல் புழையை தடுத்தல் மற்றும் அதற்கு சிகிச்சை அளித்தல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
மகப்பேறியல் புழை என்பது வளர்ந்து வரும் நாடுகளில் பல சிறுமிகள் மற்றும் பெண்களைப் பாதிக்கின்ற, குழந்தை பிறப்பின் போது ஏற்படும் ஒரு நிலையாகும்.
2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பெண்களின் உரிமைகள் மனித உரிமைகளாகும்! மகப்பேறியல் புழையை தற்போதே ஒழித்தல்” (“Women’s rights are human rights! End fistula now!”) என்பதாகும்.