TNPSC Thervupettagam

சர்வதேச மக்காச்சோள மாநாடு 2026

November 6 , 2026 15 hrs 0 min 47 0
  • முதலாவது சர்வதேச மக்காச்சோள மாநாடு (IMC) 2026 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் தொடங்கியது.
  • "மாறிவரும் உலகில் உணவு, தீவனம், உலர் தீவனம், எரிபொருள் மற்றும் நிலைத்தன்மைக்கான சோளப் புரட்சி" (M4FS) என்பது இந்த மாநாட்டின் கருத்துருவாகும்.
  • தற்போதுள்ள உணவு, தீவனம், உலர் தீவனம் மற்றும் எரிபொருள் ஆகிய 4F கட்டமைப்புடன் விவசாயிகளைச் சேர்த்து 5F கட்டமைப்பை இது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட கலப்பினங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர் மேலாண்மை மூலம் 2036 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்காச்சோள உற்பத்தியை 55 மில்லியன் டன்களில் இருந்து 75 மில்லியன் டன்களாக உயர்த்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பருவநிலை-தாங்கக்கூடிய மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட கலப்பினங்கள், காரிஃப், ரபி மற்றும் வசந்த காலங்களில் உத்திசார் பயிர் மண்டலம், மற்றும் பொது கலப்பின விதை கிடைப்பதை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது.
  • மக்காச்சோள சாகுபடி பரப்பளவில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதுடன், உலக மக்காச்சோள உற்பத்தியில் சுமார் 3.3% - 4% பங்களிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்