TNPSC Thervupettagam

சர்வதேச மத்தியதரைக் கடல் உணவு முறை தினம் 2026 - நவம்பர் 16

November 18 , 2026 2 days 79 0
  • ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், நிலையான உணவு அமைப்புகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதலாவது சர்வதேச மத்தியதரைக் கடல் உணவு முறை தினம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Science, Sustainability, and Cultural Heritage” என்பதாகும்.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இத்தினத்தை அறிவித்தது.
  • மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் தோன்றிய மத்தியதரைக் கடல் உணவு முறையில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
  • 2010 ஆம் ஆண்டில் மத்தியதரைக் கடல் உணவு முறையை மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்