சர்வதேச மருத்துவத் தாதிகள் தினமானது 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.
மருத்துவத் தாதிகளின் பணிகளை அங்கீகரிக்கவும், தாய்மார்கள் மற்றும் அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவத் தாதிகள் வழங்கும் சேவை எவ்வளவு அத்தியாவசியமானது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Follow the Data: Invest in Midwives” என்பதாகும்.
மருத்துவத் தாதிகளுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்களைக் கௌரவிப்பதற்காக ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தானது 1987 ஆம் அண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவத் தாதிகள் கூட்டமைப்பில் உருவானது.