பெண் கல்வி மற்றும் மனித உரிமைகளுக்காக மலாலா யூசுப்சாய் மேற்கொண்ட பிரச்சாரத்தை கௌரவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலாலா யூசுப்சாயின் பிறந்தநாளான ஜூலை 12 அன்று இது ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது என்பதுடன் இது 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அறிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்விக்கான உரிமையை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
பெண் கல்விக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகப் பேசியதற்காக 2012-ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலில் இருந்து தப்பிய பிறகு, மலாலா கல்வி உரிமைகளுக்கான உலகளாவிய அடையாளமாக மாறினார்.
மலாலா மிக இளைய வயதில் நோபல் அமைதிப் பரிசு பெற்றவர் ஆவார் என்பதோடு அவர் 2014 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் இந்த விருதைப் பெற்றார்.