சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (IDPD - International Day of Persons with Disabilities) - டிசம்பர் 03
December 5 , 2018 2444 days 1484 0
1992 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமானது ஆண்டுதோறும் உலகமெங்கிலும் டிசம்பர் 03-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த வருட IDPD-யின் கருத்துரு: “மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல், அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல்” (Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality) என்பதாகும்.
இந்த கருத்துருவானது 2030ஆம் ஆண்டிற்கான நீடித்த மேம்பாட்டு வளர்ச்சிக்கான வரைவில் திட்டமிடப்பட்டபடி அனைவரையும் உள்ளடக்குதல், நியாயமான மற்றும் நீடித்த மேம்பாட்டிற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.