சர்வதேச லெவல் கிராசிங் பற்றிய விழிப்புணர்வு தினம் – ஜுன் 10
June 14 , 2021 1485 days 491 0
சர்வதேச இரயில்வே ஒன்றிய அமைப்பினால் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டு சர்வதேச லெவல் கிராசிங் (இரயில்பாதை – சாலை சந்திப்பு) பற்றிய விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு, ‘கவனச் சிதறல்’ (distraction) என்பதாகும்.
இதன் முழக்கம் “கவனச் சிதறல் உயிரைப் பறிக்கும்” (Distraction kills) என்பதாகும்.
இந்தியாவின் தெற்கு – மத்திய ரயில்வேயானது லெவல் கிராசிங் உள்ள பகுதிகளில் பொது மக்களுக்காக சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இத்தினத்தினைக் கடைபிடித்தது.
தெற்கு மத்திய இரயில்வே மண்டலமானது இந்திய இரயில்வே அமைப்பின் 18 மண்டலங்களுள் ஒன்றாகும்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் இரயில்சேவைகள் தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் வரம்பிற்கு உட்பட்டவையாகும்.
தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் தற்போதைய தலைமையகம் செகந்திராபாத் இரயில்வே நிலையமாகும்.