நிலையான மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் வங்கிகளின் பங்கை எடுத்துக்காட்டுவதே இந்த நாளின் நோக்கமாகும்.
உள்கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் சமூகத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதன் மூலம் ஐ.நா. சபையின் 2030 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைய வங்கிகள் உதவுகின்றன.
வசதி முறையாக வழங்கப்படாதச் சமூகங்களுக்கு கடன் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தையும் அவை ஊக்குவிக்கின்றன.