வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பில் அவர்களின் சேவைக்காக 13 வனச்சரகர் மற்றும் வனச்சரகர் அணிகள் ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச வனச்சரகர் விருதுகளைப் பெற்றன.
இந்த விருதுகளை IUCN அமைப்பின் உலகப் பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் ஆணையம் வழங்கியது.
உக்ரைன் மற்றும் புர்கினா பாசோ உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த வனச்சரகர்கள் 5,000 அமெரிக்க டாலர் முதல் 25,000 அமெரிக்க டாலர் வரையிலான பரிசுகளை / மானியங்களைப் பெற்றனர்.
உலகளாவியப் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் வனச்சரகர்களின் முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.