2025 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
இது ISRO, IN-SPACE மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினால் (CII) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "Harnessing Space for Global Progress: Innovation, Policy, and Growth" என்பதாகும்.
ஏற்றுமதிகள் 11 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பதுடன், சுமார் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் விண்வெளித் துறை, மேலும் 2033 ஆம் ஆண்டிற்குள் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் சுமார் 200 தனியார் விண்வெளி சார் புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
இந்த மாநாட்டில் டென்மார்க் விருந்தினர் நாடாக இருந்தது.