சர்வதேச விதவைகள் தினம் - ஜூன் 23
June 26 , 2022
1145 days
473
- விதவைகளுக்கு ஆதரவைச் சேகரிப்பது மற்றும் அவர்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவது இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "விதவைகளின் நிதிச் சுதந்திரத்திற்கான நிலையான தீர்வுகள்" என்பதாகும்.
- விதவை விவகாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லூம்பா என்ற அறக்கட்டளையினால் இந்த தினமானது நிறுவப்பட்டது.
- 1954 ஆம் ஆண்டின் இதே நாளில்தான் லூம்பா பிரபுவின் தாயார் புஷ்பாவதி லூம்பா விதவையானார்.
- இத்தினமானது ஐக்கிய நாடுகள் சபையால் 2011 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப் படுகிறது.

Post Views:
473