- இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களின் சர்வதேச ஒப்பந்தத்தின் (International Treaty of Plant Genetic Resources for Food and Agriculture - ITPGRFA) 8வது அமர்வில் மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உரையாற்றினார்.
- ITPGRFA ஆனது விதை ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படுகின்றது.
- இது உலகின் தாவர மரபணு வளங்களின் பாதுகாப்பு, பரிமாற்றம் மற்றும் நிலையான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு விரிவான சர்வதேச ஒப்பந்தமாகும்.
- மேலும் இது தேசியச் சட்டங்களுக்கு உட்பட்டு விவசாயிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்கின்றது.
தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்டம்
- இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் (Protection of Plant Varieties and Farmers’ Rights - PPV&FR) சட்டமானது’ விவசாயிகளின் உரிமைகளையும் பயிர்களை வளர்ப்பவர்களின் உரிமைகளையும் பாதுகாக்கின்றது.
- இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பல்வேறு விதை வகைகள் உட்பட தனது பண்ணை விளைபொருட்களை சேமிக்க, பயன்படுத்த, விதைக்க, மீண்டும் பயிரிட, பரிமாற்றம் செய்ய, பகிர்ந்து கொள்ள அல்லது விற்றிட ஒரு விவசாயிக்கு உரிமை உண்டு.
- இந்தியச் சட்டமானது இந்த உடன்படிக்கையின் 9வது பிரிவுடன் முழுமையாக இணங்குகின்றது.