கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய சௌரப் மற்றும் கௌரவ் லுத்ராவைக் கண்டுபிடிக்க சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) ஒரு நீல அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரு நீல அறிக்கை என்பது சந்தேகத்திற்குறிய ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது என்பதோடுமேலும் இது கைது ஆணை அல்ல.
சந்தேகத்திற்குறிய நபர்களைக் கண்டறிய பயணப் பதிவுகள் மற்றும் எல்லைக் கடப்பு இடங்கள் குறித்த தகவல்களைப் பெற அதிகாரிகளுக்கு இந்த அறிக்கை உதவுகிறது.
196 உறுப்பினர் நாடுகளில் உலகளாவிய காவல் துறை ஒத்துழைப்பை ஆதரிக்க இன்டர்போல் வண்ணக் குறியீடு அறிக்கைகளைப் பயன்படுத்துகிறது.