கொழும்புவில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு சர்வதேசக் கடற்படை மதிப்பாய்விற்கு இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தை அனுப்பியது.
இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட எறிகணை போர்க் கப்பலான INS உதயகிரியையும் இதற்கு அனுப்பியது.
இது INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகிய இரண்டிற்குமான முதல் வெளிநாட்டுச் செயல்பாடு ஆகும்.
இந்தக் கப்பல்கள் கடற்படை மறு ஆய்வு நடவடிக்கைகள், அணி வகுப்புகள் மற்றும் பொது மக்கள் அணுகல் நிகழ்வுகளில் பங்கேற்றன.
இலங்கைக் கடற்படையின் 75வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.