சர்வதேசத் திமிங்கல ஆணையத்தின் முதல் இன அழிவு எச்சரிக்கை
August 24 , 2023 753 days 420 0
சர்வதேசத் திமிங்கல ஆணையம் (IWC) ஆனது அருகி வரும் வாக்கிடா போர்போயிஸ் இனத்திற்கான முதல் 'இன அழிவு எச்சரிக்கையை' வெளியிட்டுள்ளது.
மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடாவில் வெறும் 10 இனங்களே காணப்படச் செய்வதுடன் இந்த இனம் அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.
இந்த எச்சரிக்கையானது வரவிருக்கும் அழிவுகள் குறித்த எச்சரிக்கை அறிகுறிகளைப் பரந்த அளவில் அங்கீகரிப்பதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, இது வாக்கிடா இனத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டி தற்போது தேவைப்படும் நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு நிலையிலும் ஆதரவு மற்றும் ஊக்கத்தினையும் உருவாக்குகிறது.