இந்தத் தரவரிசையானது ஜீனோம் என்ற புத்தாக்க நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவியத்ப் புத்தாக்க நிறுவனச் சூழலமைவு அறிக்கைக்காக (2021) வேண்டி அந்நிறுவனத்தினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி லண்டன், மும்பை மற்றும் பெங்களூரு ஆகியவை உலகின் முன்னணி புத்தாக்க நிறுவன மையங்களாக இடம் பெற்றுள்ளன.
இதில் பெங்களூரு 24வது இடத்தினைப் பெற்றுள்ளது.
இதில் டெல்லி 36வது இடத்தில் உள்ளது.
செயல்திறன், நிதி, திறன் மற்றும் சந்தை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் சூழல் அமைவுகளை விஞ்சி அப்பிரிவில் மும்பை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
உலகின் 4வது மிகப்பெரியத் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் தொகுப்பமைவாக கர்நாடக மாநிலம் திகழ்கிறது.