ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டை 'சர்வதேசப் பெண் விவசாயிகள் ஆண்டு' என அறிவித்துள்ளது என்ற நிலையில்இது சர்வதேச மகளிர் தினத்தின் போது முன்னிலைப்படுத்தப் பட்டது என்பதோடுஇதன் மூலம் பாலினம், விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்று உள்ளன.
இந்தியாவில், சுமார் 80% கிராமப்புறப் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதோடுஇவர்கள் கிட்டத்தட்ட சுமார் 70% பண்ணை வேலைகளைச் செய்கிறார்கள், குறிப்பாக பயிர் உற்பத்தியில் 75%, தோட்டக்கலையில் 79%, மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்தில் 95% பங்களிக்கின்றனர்.
இவ்வளவு பெரிய பங்களிப்பு இருந்த போதிலும், இந்தியாவில் வெறும் 13.9% விவசாய நிலங்கள் மட்டுமே பெண்களின் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
பருவநிலை மாற்றம் பெண்களின் பாதிப்புத் தன்மையை மேலும் அதிகரிக்கிறதுஎன்பதோடு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், அவர்கள் பண்ணை வேலைகள் மற்றும் ஊதியமில்லாத வீட்டு வேலைகளைச் செய்வதோடு, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கிராமப்புறங்களில் இருந்து ஆண்கள் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்துள்ளதால், "விவசாயத்தின் பெண்ணாக்கம்" ஏற்பட்டுள்ளது.