சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியின் முதல் கூட்டம்
June 20 , 2025 171 days 126 0
சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியின் (IBCA) முதல் கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் 2023 ஆம் ஆண்டு மைசூரில், புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் IBCA கூட்டணிக் குறித்து அறிவித்தார்.
இந்திய அரசு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் மூலம் இந்தக் கூட்டணியினை நிறுவியது.
IBCA என்பது ஏழு பெரும் பூனை இனங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பினைக் கொண்ட 95 புலிகள் வாழ்விடம் கொண்ட நாடுகளின் கூட்டணியாகும்.
ஏழு பெரும் பூனை இனங்களாவன: புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கிப் புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகியனவாகும்.