கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற 42வது கூட்டத்தின் போது, சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) சபையின் இரண்டாம் பிரிவிற்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இரண்டாம் பிரிவானது, சர்வதேச பொது விமான வழிசெலுத்தல் வசதிகளுக்கு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கும் நாடுகளை உள்ளடக்கியது.
1944 ஆம் ஆண்டு முதல் ICAO சபையில் தொடர் உறுப்பினராக இருந்து வருகின்ற இந்தியா, உலகளாவிய விமானப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.