புது தில்லியில் மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் வீரச் செயல்கள் புரிந்த 12 எலி-வளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு (Rat-hole miners) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' பதக்கத்தை வழங்கினார்.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் (MHA) நிர்வகிக்கப்படும் குடிமக்களுக்கான உயிர்காக்கும் விருதான ஜீவன் ரக்ஷா பதக்கத்தின் மிக உயர்ந்த பிரிவாகும்.
இந்த விருதானது 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று நிறுவப்பட்டது, பின்னர் இது சர்வோத்தம், உத்தம் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக்கம் என மூன்று நிலைகளாக வகைப்படுத்தப் பட்டது.
சுரங்கச் சரிவுகள், தீ விபத்துகள், வெள்ளம் மற்றும் பிற பேரிடர்களின் போது தங்களுக்கு ஏற்படும் அதீத ஆபத்தையும் பொருட்படுத்தாமல் மனித உயிர்களைக் காப்பாற்றுபவர்களை இது கௌரவிக்கிறது.
இந்த விருது அனைத்து குடிமக்களுக்கும் திறந்திருக்கும் மற்றும் மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படலாம்; பெறுநர்களுக்கு ₹2 லட்சம் ரொக்க மானியம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.