உயர் இராணுவ அதிகாரிகள், ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சிந்தூர் நடவடிக்கைக்காக சர்வோத்தம் யுத் சேவா பதக்கத்தினைப் பெற்றனர்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 07 ஆம் தேதியன்று சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு முதன்முறையாக விமானப்படை அதிகாரிகளுக்கும் சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் (ஓய்வு), ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர், ஏர் மார்ஷல் ஜீதந்திர மிஸ்ரா மற்றும் ஏர் மார்ஷல் A.K. பாரதி ஆகியோர் இந்தப் பதக்கத்தினைப் பெற்றனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மொத்தம் 36 விமான வீரர்கள் அவர்களின் துணிவு மற்றும் திறமைக்காக பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.