சர்ஹுல் என்பது சமீபத்தில் முக்கியமாக ஜார்கண்ட் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கொண்டாடப்பட்ட ஒரு முக்கிய பழங்குடியினத் திருவிழாவாகும்.
இது இயற்கையை வழிபடுவதையும், பழங்குடியினச் சமூகங்களில் வசந்த காலத்தின் வருகையையும் குறிக்கிறது.
இந்தத் திருவிழா புனிதமான 'சால்' மரத்துடன் தொடர்புடையது என்பதோடு இம்மரம் கிராம தெய்வத்தின் (சர்னா மா) இருப்பிடமாகக் கருதப்படுகிறது.
இது சூரியன் மற்றும் பூமியின் இணைப்பைக் குறிப்பதோடு, வாழ்வின் புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை அடையாளப் படுத்துகிறது.