சீனாவில் நு நதி என்று அழைக்கப்படும் சல்வீன் நதியில் பாதுகாப்பான வரம்புகளுக்கு மேல் அதிக அளவு ஆர்சனிக் மாசுபாடு காணப்படுகிறது.
ஆசியாவின் மிக நீளமான தடையின்றி பாயும் (அணைகள் கட்டப்படாத) நதியான சல்வீன் நதி சுமார் 3,300 கி.மீ தூரம் வரை நீண்டுள்ளது.
ஆர்சனிக் அளவுகள் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்பான ஒரு லிட்டருக்கு 0.01 மில்லிகிராம் (mg/L) என்பதைத் தாண்டி, சில பகுதிகளில் 0.554 மி.கி/லி வரை அடைகின்றன.
இந்த மாசுபாடு முக்கியமாக மியான்மரின் ஷான் மாநிலத்தில் நடைபெறும் கட்டுப் பாடற்ற சுரங்க நடவடிக்கைகளாலேயே ஏற்படுகிறது.
இந்த ஆற்றுப்படுகையில், அரிய வகை உலோகங்கள் மற்றும் தங்கச் சுரங்க செயல் பாடுகள் உட்பட சுமார் 127 சுரங்கத் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீத்தேன் மற்றும் கன உலோக மாசுபாடு, பல்லுயிர்த் தன்மையையும் இந்த நதியை நம்பியுள்ள உள்ளூர்ச் சமூகங்களையும் அச்சுறுத்துகிறது.