சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சவல்கோட் அணைத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக புதுப்பிக்கப் பட்ட பரிசீலனையில் உள்ளது.
1984 ஆம் ஆண்டிலிருந்து செனாப் நதியில் அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்ட இந்த நீர் மின் நிலையத் திட்டமானது, 1,865 மெகாவாட் அளவிலான நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2013 வழிகாட்டுதல்களுக்கு முன்பே இதற்கான திட்டம் தொடங்கப்பட்டதைக் காரணம் காட்டி வன ஆலோசனைக் குழு (FAC) ஆனது, இந்தத் திட்டத்திற்கு இந்த ஆய்வுகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
இந்த அணைக் கட்டமைப்புத் திட்டத்தில், பெரும்பாலும் ராம்பன் மாவட்டத்தில் 2.2 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படுவதுடன் 846 ஹெக்டேர் பரப்பிலான வன நிலங்கள் பாதிக்கப்படும்.
பாகிஸ்தான் மேற்கு நதிகளை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் கட்டுப்படுத்துவதுடன், மத்திய-மாநிலத் தகராறுகள் மற்றும் ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தத் திட்டமானது தாமதங்களைச் சந்தித்துள்ளது.
"run-of-river" திட்டம் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், சவல்கோட்டில் ஒரு பெரிய நீர்த் தேக்கத்துடன் கூடிய 192.5 மீட்டர் உயரக் கற்காரை/கான்கிரீட் அணை அமைக்கப்பட உள்ளது சுற்றுச்சூழல் பாதிப்பு சார்ந்த கவலைகளை எழுப்புகிறது.