2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்ட பிறகு சவல்கோட் நீர்மின் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
1,856 மெகாவாட்திறன் கொண்ட சவல்கோட் நீர்மின் திட்டமானது ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில் ஆற்றில் கட்டமைக்கப்படும் நீர்மின் திட்டமாகும்.
இந்தத் திட்டம் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்ற நிலையில் பின்னர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்கப்பட்டது.
செனாப் ஆனது உலக வங்கியின் இடையீட்டுடன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (1960) கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட சிந்து நதியின் மேற்குப்பகுதி துணை நதியாகும்.