சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா, பிப்ரவரி 22 அன்று முதல்முறையாக தனது நிறுவனத் தினக் கொண்டாட்டங்களை மேற்கொண்டது.
இந்த ஆண்டு விழாவானது, 1727 ஆம் ஆண்டில் முதல் சவுதி அரசினைத் தோற்றுவித்த முகமது பின் சவுத் (Mohammed bin Saud), திரியா அமீரகத்தைக் கைப்பற்றிய தினத்தைக் குறிக்கிறது.
திரியா அமீரகமானது தற்போது சவுதியின் தலைநகரான ரியாத் நகரின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு தொலைதூர நகரமாகும்.