TNPSC Thervupettagam

சவுதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்

September 24 , 2025 3 days 23 0
  • சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு நாட்டிற்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பாக கருதப் படும் என்று அறிவிக்கின்ற ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது, பாகிஸ்தான் அரசானது சவுதி நாட்டின் படைகளுக்கு வரலாற்று ரீதியாகப் பயிற்சி அளிப்பதோடு சவுதி அரேபியாவானது பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் உட்பட அந்நாட்டிற்கான நிதி ஆதரவை வழங்குவதுடன் இரு நாடுகளின் நீண்ட கால இராணுவ உறவுகளை முறைப்படுத்துகிறது.
  • சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையானது, குறிப்பாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காசா மோதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இயல்பாக்கம் தடை பட்டுள்ள நிலையில், அதன் கூட்டணிகளின் பன்முகத் தன்மையைக் குறிக்கிறது.
  • பாகிஸ்தான், ந்த வளைகுடா நாட்டிலிருந்து நிதி ஆதரவைப் பெறும் அதே வேளையில், பிராந்தியப் பாதுகாப்பு வழங்குநராக தனது பங்கை வலுப்படுத்த முயல்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்