தற்போது இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கும் ஒரு நோக்குடன் தொடங்கப்பட்ட சாகர் IX திட்டத்தின் ஒரு பகுதியாக INS கரியால் எனும் ஒரு கப்பலானது கொழும்பு நகரைச் சென்று அடைந்தது.
இது 760 கிலோவுக்கும் அதிகமான அளவில் 107 வகையான உயிர்காக்கும் மருந்துகளை இலங்கையிடம் வழங்கியது.
இந்தக் கப்பலை இலங்கை சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமணா வரவேற்றார்.