புதிய கடலோர ஆய்வுக் கப்பலான (Coastal Research Vessel-CRV) சாகர் தாராவானது கொல்கத்தாவின் திட்டாகார்க் வேகன்ஸ் லிமிடெட்டின் கப்பல் தளத்தில் வெளியடப்பட்டது.
இந்த கப்பலானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்டது.
இது ஆய்வாளர்கள் பல்வேறு கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள உதவும் சிறப்பு வாய்ந்த ஆய்வகங்களை உள்ளடக்கியது ஆகும்.
இந்த கப்பல் தளத்தில் கட்டப்பட்ட இரண்டு கடலோர ஆராய்ச்சி கப்பல்களில் சாகர் தாராவானது இரண்டாவதாகும். மற்றொன்று சாகர் அன்வேஷிகா ஆகும்.
இந்த இரண்டு கப்பல்களும் ஏற்கனவே கடற்படையில் உள்ள சாகர் பஸ்சிமி மற்றும் சாகர் பூர்வி ஆகியவற்றிற்குப் பதிலாக மாற்றப்படும்.