மத்திய மீன்வாழ் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, சாகர் பராக்கிரமம் திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தத் திட்டமானது மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றால் மீன்வளத்துறை, இந்தியக் கடலோரக் காவற்படை, இந்திய மீன்வள ஆய்வு அமைப்பு, குஜராத் கடல்சார் வாரியம் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இது அனைத்துக் கடலோர மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களிலுள்ள அனைத்து மீனவர்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடனான ஒற்றுமையைப் பறைசாற்றுவதற்காக வேண்டி, முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒரு கடல் பாதையில் மேற்கொள்ளப்படும் கடற்பயணம் ஆகும்.
கடலோர மீனவச் சமூகத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பினைப் பாதுகாக்கச் செய்வதற்காக வேண்டி கடல்மீன்வளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான நிலையானச் சமநிலை மீது இந்தத் திட்டம் கவனம் செலுத்தும்.