சாகர் பரிக்ரமா திட்டத்தின் நான்காவது கட்டம் ஆனது, கர்நாடகா மாநிலத்தின் உத்தர கன்னடா, உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகிய மூன்று கடலோர மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
சாகர் பரிக்ரமா என்பது மீனவர்கள், மீன் வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் இதர பிறப் பங்குதாரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்துக் கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் கடல் சார் பயணத்தை ஏற்பாடு செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
பல்வேறு மீன்பிடி சார் திட்டங்களைச் செயல்படுத்தச் செய்வதன் மூலம் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அவர்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் கட்டமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3 இடங்களை உள்ளடக்கிய இந்தப் பயணமானது குஜராத்தின் மாண்ட்வியிலிருந்து ஓகா-துவாரகா வரை மேற் கொள்ளப்பட்டு போர்பந்தரில் நிறைவடைந்தது.
ஏழு இடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டமானது 2022 ஆம் ஆண்டு மாதத்தில் செப்டம்பர் நடைபெற்றது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்றாவது கட்டமானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.