TNPSC Thervupettagam

சாகர் மைத்ரி திட்டம் - 2

July 19 , 2019 2124 days 763 0
  • கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைக் கட்டளைத் தளத்திலிருந்து 2 மாதம் நடைபெறும் சாகர் மைத்ரி திட்டம் - 2 என்ற ஒரு திட்டத்திற்கான பயணத்தை ஐஎன்எஸ் சாகர்த்வானி தொடங்கியுள்ளது.
  • இது கொச்சியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO - Defence Research and Development Organisation) கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டது.
  • சாகர் மைத்ரி திட்டத்தின் முதன்மையான குறிக்கோள்கள் பின்வருமாறு:
    • ஒட்டு மொத்த வட இந்தியக் கடலிலிருந்து தரவு சேகரிப்பு,
    • அந்தமான் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல்களின் மீது கவனத்தைச் செலுத்துதல்,
    • கடல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் 8 இந்தியக் கடல் கூட்டமைப்பு நாடுகளுடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்.
  • இது 1962-65 ஆம் ஆண்டுகளில் சர்வதேச இந்தியக் கடல் பயணத்தை மேற்கொண்ட இந்தியாவின் ஒரே ஆராய்ச்சிக் கப்பலான “ஐஎன்எஸ் கிஸ்த்னாவின்” பொன் விழாக் கொண்டாட்டத்தினை அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்