TNPSC Thervupettagam

சாகித்ய அகாடமி விருது 2020

March 16 , 2021 1594 days 805 0
  • சாகித்ய அகாடமி “2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது” வென்ற நபர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • இந்த விருது இலக்கியப் பின்னணியில் மிகச் சிறந்த புத்தகங்களுக்கு வழங்கப் படுகிறது.
  • 24 முதன்மை இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கு இது வழங்கப் படுகிறது.
  • ஆங்கிலம், இந்தி மற்றும் அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் இருக்கும் 22 மொழிகளும் இதில் அடங்கும்.
  • ஆங்கிலத்தில் “When God is a Traveller” என்ற கவிதைத் தொகுப்பிற்காக சுப்பிரமணியம் அவர்கள் இந்த விருதை வென்றுள்ளார்.
  • கன்னட மொழியில் “ஸ்ரீ பாஹுபலி அஹிம்சா திக்விஜயம்” என்ற காவியக் கவிதைக்கு வேண்டி வீரப்ப மொய்லி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • தமிழ் எழுத்தாளர் இமயம் தனது ‘செல்லாத பணம்’ என்ற புதினத்திற்காக 2020 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
  • அவர் தன்னை திராவிட இயக்கத்தின் எழுத்தாளர் என்று அழைத்துக் கொள்கிறார்.
  • இந்த விருதை வென்ற தமிழ்நாட்டின் ‘நடு நாடு’  எனப்படும் கடலூர், விழுப்புரம் மற்றும் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த முதல் எழுத்தாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்