யுவ புரஸ்கார் விருதானது 23 மொழிகளுக்கு வழங்கப் படுகிறது.
விருது பெற்றவர்களில் ஆங்கில மொழிப் பிரிவில் அத்வைத் கோட்டாரி, இந்தி மொழிப் பிரிவில் பார்வதி திர்கே, தமிழ் மொழிப் பிரிவில் லட்சுமிஹார் மற்றும் தெலுங்கு மொழிப் பிரிவில் பிரசாத் சூரி ஆகியோர் அடங்குவர்.
இந்த ஆண்டு டோக்ரி மொழிப் பிரிவில் யுவ புரஸ்கார் விருது வழங்கப்படவில்லை.
விருது வென்ற மற்ற வெற்றியாளர்களில் அசாமிய மொழிப் பிரிவில் சுப்ரகாஷ் புயான், வங்காள மொழிப் பிரிவில் சுதேஷ்னா மொய்த்ரா, கன்னட மொழிப் பிரிவில் R.திலீப் குமார் மற்றும் மலையாள மொழிப் பிரிவில் அகில் P. தர்மஜன் ஆகியோர் அடங்குவர்.
சாகித்ய அகாடமியானது தனது பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு வேண்டி 24 நூலாசிரியர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளது.
மலையாள மொழிப் பிரிவில் ஸ்ரீஜித் மூத்தேடத், தமிழ் மொழிப் பிரிவில் விஷ்ணுபுரம் சரவணன், தெலுங்கு மொழிப் பிரிவில் கங்கிசெட்டி சிவக்குமார் ஆகியோர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில மொழி உட்பட 24 இந்திய மொழிகளில் பெரும் இலக்கியச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாடமி மட்டுமே ஆகும்.