சாகித்திய அகாடமியின் ‘சாகித்யோத்சவ்’ என்றழைக்கப்படும் ஒரு கடிதத் திருவிழா என்பது இந்தியாவின் மிக உள்ளார்ந்த ஒரு இலக்கியத் திருவிழாவாகும்.
இந்த விழாவானது இந்தியாவின் 75வது சுதந்திர விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும்.
இந்த நிகழ்ச்சிகள் சுதந்திரம் அல்லது சுதந்திர இயக்கம் என்ற ஒரு கருத்துருவைக் கொண்டு நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியானது அகாடமியின் சாதனைகள் மற்றும் முந்தைய ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகள் பற்றி எடுத்துரைக்கும்.
அகாடமியினால் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளின் பிரதிநிதியாக 26 இளம் எழுத்தாளர்கள் (The Rise of Young India) ‘இளம் இந்தியாவின் எழுச்சி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.