மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியப் பாதுகாப்பு ஆராய்ச்சிச் சங்கமானது (Petroleum Conservation Research Association - PCRA) எரிபொருள் பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
PCRA என்பது பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உத்திகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை முன்மொழியும் இந்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் ஒரு அமைப்பாகும்.
எண்ணெய் வளங்களை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்தப் பிரச்சாரமானது நடத்தப் படுகின்றது.