TNPSC Thervupettagam

சாக்சம் ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு அமைப்பு

October 13 , 2025 14 hrs 0 min 24 0
  • நிகழ்நேர ஆளில்லா வான்வழி வாகன அச்சுறுத்தல்களை நடுநிலைப் படுத்தச் செய்வதற்காக இந்திய இராணுவமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சாக்சம் ஆளில்லா வான்வழி வாகன அமைப்பின் (CUAS) கட்டமைப்பினை உட்சேர்த்துள்ளது.
  • காசியாபாத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடன் இணைந்து சாக்சம் உருவாக்கப்பட்டது என்பதோடு இது பாதுகாப்பான இராணுவத் தரவு வலையமைப்பில் (ADN) செயல்படுகிறது.
  • இந்த அமைப்பு ஆனது உத்திசார் போர்க்கள அமைப்பில் (TBS) முழுமையாக நிகழ்நேர கட்டமைப்பில் எதிரி நாட்டு ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளைக் கண்டறிந்து, கண்காணித்து, அடையாளம் காட்டி, எதிர்க்கிறது.
  • இது நிகழ்நேர அச்சுறுத்தலைக் கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்புப் பகுப்பாய்வு மற்றும் படை வீரர்களுக்கு தானியங்கி முடிவு வழங்கீட்டு ஆதரவை வழங்குகிறது.
  • இது CUAS உணர்வுக் கருவிகள் மற்றும் ஆயுதங்களை ஒருங்கிணைக்கிறது, மேலும் முப்பரிமாண போர்க்களக் காட்சிப்படுத்தலை செயல்படுத்தி, ஆகாஷ்தீர் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புடன் உள்ளீடுகளை ஒத்திசைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்