TNPSC Thervupettagam

சாதி அடிப்படையிலான பொது இடங்களை மறுபெயரிடுதல்

October 13 , 2025 14 hrs 0 min 40 0
  • சாதி அடிப்படையிலான அல்லது பாகுபாடான பெயர்களைக் கொண்ட இடங்களை அடையாளம் கண்டு மறுபெயரிடுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து "காலனி" என்ற சொல்லினை நீக்குவதற்கான முதலமைச்சரின் சட்டசபை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.
  • ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் காலனி, வண்ணாங்குளம், பறையர் தெரு மற்றும் சக்கிலியர் சாலை போன்ற பெயர்கள் நடுநிலையான மாற்றுப் பெயர்களுடன் மறு பெயரிடப் பட உள்ளன.
  • இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக கிராம சபை மற்றும் பகுதி சபையின் ஒப்புதல்கள் தேவையாகும்; பழையப் பெயர்களே தக்க வைக்கப்பட்டால் அதற்கான சரியான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ஆகியவற்றின் படி மாநில அரசினால் இறுதி முடிவுகள் எடுக்கப் படும்.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் உள்ள வருவாய் கிராமங்களில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குவதற்கு இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்