சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு – பீகார்
June 5 , 2022 1335 days 664 0
பீகார் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான ஒரு கணக்கெடுப்பினைத் தொடங்கச் செய்வதற்கான ஒரு முன்மொழிவிற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பானது மாநில அளவில் பொது நிர்வாகத் துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
மாவட்ட நீதிபதிகள் முனைய அதிகாரிகளாகச் செயல்படுவதோடு அவர்கள் தத்தமது மாவட்டங்களில் உள்ள பணியாளர்களை இதற்கானக் கணக்காளர்களாக இந்தப் பணியில் ஈடுபடுத்துவர்.