TNPSC Thervupettagam

சாத் திருவிழா 2025

September 23 , 2025 4 days 78 0
  • மத்தியக் கலாச்சார அமைச்சகமானது, சாத் திருவிழாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்காக பன்னாட்டுப் பரிந்துரையைப் பெற முயற்சித்து வருகிறது.
  • 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதிப் பட்டியலில் சேர்ப்பதற்காக இந்த முன்மொழிதல் முன் வைக்கப் பட்டுள்ளது.
  • சாத் திருவிழாவானது, சூரியக் கடவுள் மற்றும் தெய்வம் சாத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப் படுகின்ற திருவிழாவாகும்.
  • இந்தியாவின் பழமையான பண்டிகைகளில் ஒன்றான இது பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மாபெரும் கொண்டாட்டங்களுடன் கொண்டாடப்படுகிறது.
  • மொரிசியஸ், பிஜி, சுரினாம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்த சமூகங்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் தற்போது 15 கூறுகள் யுனெஸ்கோ அமைப்பின் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியங்களின் பிரதிநிதி/மாதிரிப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்