ஜம்மு & காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ‘சாத்’ எனப்படும் கிராமப்புற நிறுவனங்களுக்கான உத்வேக திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ள கிராமப்புற பெண்களின் வாழ்க்கை நிலையை மாற்றியமைக்கும் நோக்கோடு இந்த முன்னெடுப்பானது தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது ஜம்மு & காஷ்மீரிலுள்ள சுமார் 4 லட்சம் பெண்கள் இணைக்கப் பட்ட சுமார் 48000 சுயஉதவிக் குழுக்களுக்கு உதவியினை வழங்கும்.
இக்குழுக்கள் சார்ந்த பெண்களால் உருவாக்கப்பட்ட பொருள்கள் குறித்த வழி காட்டுதல்கள் மற்றும் அவற்றைச் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் சாத் முன்னெடுப்பானது ஈடுபாடு செலுத்தும்.
பெண்கள் தமக்கென ஒரு சொந்த வணிகத்தினைத் தொடங்க உதவிய உமீத் திட்டத்தின் (Umeed scheme) வரிசையில் சாத் முன்னெடுப்பானது தொடங்கப்பட்டு உள்ளது.