மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகமானது சுற்றுலா (விருந்தோம்பல்) தொழிற்துறைக்காக சாத்தி என்ற செயலியைத் தொடங்கியுள்ளது.
இது உணவகங்கள் மற்றும் அதன் அலகுகளின் பாதுகாப்பு குறித்து பணியாளர்கள், உணவக முதலாளிகள் மற்றும் விருந்தினர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் பாதுகாப்பான முறையில் செயல்படுவதற்காகவும் வேண்டி சுற்றுலாத் தொழிற்துறைக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து சுற்றுலாத் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.