TNPSC Thervupettagam

சாரண்டா காடு - வனவிலங்கு சரணாலயம்

November 17 , 2025 10 days 88 0
  • சாரண்டா காடுகளின் 31,468.25 ஹெக்டேர் பகுதியை வனவிலங்குச் சரணாலயமாக அறிவிக்க உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் அரசிற்கு உத்தரவிட்டது.
  • சால் காட்டு ஆமை, நான்கு கொம்புகள் கொண்ட மறிமான், ஆசிய மரநாய் மற்றும் காட்டு யானைகள் உள்ளிட்ட அருகி வரும் உயிரினங்களுக்கு சாரண்டா வாழ்விடமாக உள்ளது.
  • இந்த காடு ஹோ, முண்டா மற்றும் உரான் போன்ற பழங்குடி சமூகங்களை கொண்டு உள்ளது என்பதோடு இந்த அந்தஸ்து மூலம் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
  • இந்தியாவின் இரும்புத் தாது இருப்புகளில் 26% இந்தப் பகுதியில் உள்ளது ஆனால் புதிதாக அறிவிக்கப்பட்ட சரணாலயத்தில் எந்தச் சுரங்கமும் இல்லை.
  • சரணாலயத்திற்குள் மற்றும் அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் சுரங்க நடவடிக்கைகள்  தடை செய்யப்பட்டுள்ளன.
  • ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சரண்டா காடு அமைந்துள்ளது.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய சால் காடு ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்