சாலை விபத்துகள் குறித்த ஒருங்கிணைந்த தரவுதளம் (Integrated Road Accident Database - IRAD)
January 19 , 2020 2038 days 704 0
இந்திய அரசாங்கமானது இந்த IRAD எனும் தரவுதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
முதன்முதலில் இந்த அமைப்பானது சாலை விபத்துகளினால் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ள கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது.
IRAD கைபேசிச் செயலியானது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக காவல்துறைப் பணியாளர்களுக்கு சாலை விபத்து பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய உதவும். அதைத் தொடர்ந்து அந்த விபத்து சம்பவம் தொடர்பான ஒரு தனிப்பட்ட அடையாள எண் உருவாக்கப் படும்.
சாலை விபத்துக்கானக் காரணங்களைப் பகுப்பாய்வு செய்வதிலும், நாட்டில் இது போன்ற விபத்துக்களைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இது உதவும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை இந்தியா எதிர்கொள்கின்றது.
இது பற்றி
இதை மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது உருவாக்கியுள்ளது.
இது தேசிய தகவல் மையத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான செலவிற்கு உலக வங்கி நிதி உதவியளிக்கின்றது.