சாலை விபத்துகள் குறித்த தகவல்களுக்கான ஒருங்கிணைந்த தரவுத் தளம்
April 30 , 2022 1194 days 461 0
சாலை விபத்துகள் குறித்த தகவல்களுக்கான ஒருங்கிணைந்த தரவுத் தளம் (iRAD - Integrated Road Accident Database) என்பது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
நாட்டின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
பல்வேறு துறைகள்/பங்குதாரர் அமைப்புகளின் விபத்து தொடர்பான அனைத்துத் தரவையும் ஒன்றிணைத்து அணுகுவதற்கு ஒரு மையப்படுத்தப்பட்ட விபத்து தரவுத் தளத்தை உருவாக்கச் செய்வதே இது உருவாக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள ஒரு முக்கியக் குறிக்கோள் ஆகும்.
இது சமீபத்தில் சண்டிகர் நகரில் தொடங்கப்பட்டது.
சாலை விபத்துகள் குறித்த தகவல்களுக்கான ஒருங்கிணைந்த தரவுத் தளம் என்பது, இந்தியா முழுவதும் விபத்துக்குள்ளாகும் பகுதிகள் பற்றிப் பல்வேறு விபரங்களைச் சேகரிப்பதற்காக வேண்டி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.