தேசிய சோதனை மையம் (NTH) ஆனது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் (NHAI) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தரக் கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.
NTH ஆனது, NHAI ஆணையத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட சோதனை ஆய்வகமாக பதிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலை கட்டுமானப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் சோதனைகளை நடத்தும்.
காசியாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, பெங்களூரு மற்றும் வாரணாசியில் உள்ள NTH மையத்தின் பிராந்திய ஆய்வகங்களில் சோதனை செய்யப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் NHAI ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவுடன், NHAI அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயிலரங்கங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல் ஆகியவை அடங்கும்.
தேசிய சோதனை மையம் ஆனது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.