சாலைப் பாதுகாப்பிற்கான “சாலை விபத்துகளற்ற அணுகுமுறை” (Vision Zero approach)
February 22 , 2020 2156 days 862 0
சுவீடனின் ஸ்டாக்ஹோமில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் “சாலை விபத்துகளற்ற அணுகுமுறையானது” அதிக அளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சாலை விபத்துகளினால் எந்தவொரு நபரும் கொல்லப்படக் கூடாது அல்லது வாழ்நாள் முழுவதும் காயமடையக் கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
“சாலை விபத்துகளற்ற அணுகுமுறை” என்ற கருத்தாக்கமானது சுவீடன் நாடாளுமன்றத்தினால் 1997 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்த அணுகுமுறையால் சுவீடன் நாடானது சாலை இறப்புகளை பாதியாகக் குறைத்துள்ளது.