சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் - நவம்பர் 15
November 15 , 2020 1713 days 484 0
அக்டோபர் 26, 2005 அன்று, ஐக்கிய நாடுகள் சபையானது இந்த தினத்தை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு உலகளாவிய நாளாக கடைபிடிக்குமாறு வேண்டி அங்கீகரித்துள்ளது.
இது 1993 ஆம் ஆண்டில் பிரிட்டனில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தொண்டு செய்யும் நிறுவனமான ரோட் பீஸ் (Road Peace) என்ற ஒரு நிறுவனத்தால் தொடங்கப் பட்டது.
சாலை விபத்துக்களில் அதிக எண்ணிக்கையில் உயிர்களை இழப்பதில் சீனாவுக்கு அடுத்தபடியான நாடு இந்தியாவாகும்.
இந்தியாவில், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கிட வேண்டி ‘இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்’ என்ற ஒரு சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
இந்தச் சட்டம் ‘மோட்டார் வாகன சட்டம் 2019’ என்ற சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னையை மையமாகக் கொண்ட தோழன் என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மார்ச் 30 ஆம் தேதியானது (2020) ‘இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்’ என்ற ஒரு சட்ட நாளாகக் கொண்டாடப் பட்டது.