சிகப்பு வழித்தடத்தில் உள்ள வனப் போர் பயிற்சிப் பள்ளி
September 22 , 2025 60 days 120 0
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் மாவோயிஸ்ட் தளமான கர்ரேகுட்டா மலைகளில் அரசாங்கம் ஒரு வனப் போர் பயிற்சிப் பள்ளியை அமைத்து வருகிறது.
இந்தப் பள்ளி மத்திய சேமக் காவல் படை (CRPF), சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் உறுதி கொண்ட செயலுக்கான அதிரடிப்படை பிரிவு (COBRA) போன்ற படைகளுக்குச் சிறப்பு வன மற்றும் குகை சார் நடவடிக்கை உத்திகளில் பயிற்சி அளிக்கும்.
குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட கடினமான நிலப்பரப்பைக் கொண்ட கர்ரேகுட்டா மலைகள், ஒரு பெரிய CRPF நடவடிக்கைக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நக்சல் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டன.
இந்த உண்மையான நிலப்பரப்பு ஆனது பயிற்சித் தரத்தை மேம்படுத்த உதவும்.
தற்போது இது போன்றப் பணிகளுக்காக சுமார் 100 படைப்பிரிவுகள் நிலை நிறுத்தப் பட்டுள்ளதுடன் CRPF ஆனது எதிர்ப்புக் கிளர்ச்சி மற்றும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.