TNPSC Thervupettagam

சிக்கிமில் 'சிறி' மாடுகள் பாதுகாப்பு

November 12 , 2026 2 days 64 0
  • 'சிறி' (Siri) ரக மாடுகளைப் பாதுகாப்பதற்காக 'சிறி மாடுகள் பாதுகாப்புச் சிறப்பகம்' அமைப்பதற்கும், வெண்மைப் புரட்சி 2.0-இன் கீழ் வடக்கு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தைத் தொடங்குவதற்கும் சிக்கிம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • 'சிறி' என்பது முக்கியமாக சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் (மேற்கு வங்கம்) பகுதிகளில் காணப்படும் ஒரு உள்நாட்டு இருவகைப் பயன்பாட்டுக்கு உதவும் மாட்டு இனமாகும்; இது வரலாற்று ரீதியாக பூட்டானுடன் தொடர்புடையது, அங்கு இது 'நுப்லாங்' (Nublang) என்று அழைக்கப்படுகிறது.
  • மலைப்பகுதிகளுக்கு ஏற்றவாறு வாழக்கூடிய இந்த மாடுகள் பால் உற்பத்திக்கும், விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • பாக்யாங் மாவட்டத்தில் உள்ள சுச்சாசென் என்ற இடத்தில் சிறி காளைகள் தாய் பண்ணை (Siri Bull Mother Farm) அமைக்கப்படவுள்ளது, இதற்கு ₹27.64 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் திட்டம் மூலம் ஆதரவளிக்கப்படும்.
  • மங்கன் பகுதியில் வடக்கு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தொடங்கப்பட்டுள்ளது; தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) பால்வளத்துறை நவீனமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த 'சிக்கிம் மில்க்' பிராண்டை/அடையாளத்தை உருவாக்கத் திட்டமிடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்